ETV Bharat / sitara

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப் படம் என்னவாயிருக்கும்?

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்கான வேலை மார்ச் 9ஆம் தேதியான இன்று பூஜையுடன் தொடங்கியது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
author img

By

Published : Mar 9, 2022, 11:11 PM IST

தனது முதல் திரைப்படமான காக்கா முட்டை படத்தில் அபார நடிப்புத் திறமையைக் காட்டி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை எளிமையாக தக்கவைத்துக் கொண்டவர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், இவர் கடந்து வந்த பாதையோ மிகவும் கரடுமுரடான கஷ்டங்களை மட்டுமே கண்ணாடிகளாகக் கொண்ட சிறு குருவிக்கூடு.

கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி

அது தற்போது, மிகப் பிரமாண்டமான மாளிகையாக வளர்ந்து வானுயர்ந்துள்ளது. தொடர்ந்து அவர் நடித்த வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட திரைப்படங்களால் பெரிதானது அனைவரும் அறிந்ததே ஆகும்.

தற்போது 'கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி' ரசிகர்களின் மனதில் வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு வித்தியாசமான கதைக் களத்தை தேர்ந்து எடுத்துள்ளார்.

அது பல திருப்பங்கள் நகைச்சுவை, சண்டை காட்சிகள் நிறைந்த இன்னும் பெயரிடப்படாத படமாகும். அதில் கதையின் நாயகியாக நடிக்க உள்ளது கூடுதல் சிறப்பு. எந்த கதையாக இருந்தாலென்ன நம்ம தமிழ்நாட்டு ஐஸ்வர்யாவிற்கு நடிக்க கற்றுத்தரவா வேண்டும். சரி பார்க்கலாம்.

பூஜையுடன் தொடக்கம்

ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து 'புரொடக்ஷன் நம்பர் 1' என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கின்றன. இதனை லாக்கப் திரைப்படத்தின் இயக்குநர் SG. சார்லஸ் இயக்குகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் நடிகை லட்சுமி பிரியா, நடிகர்கள் சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கலை இயக்கத்தை ரவி கவனிக்க உள்ளார்.

படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.

இதையும் படிங்க: 'விஷாலின் கம்பெனியில் பணமோசடி செய்த பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன்' - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.