ETV Bharat / state

பழனி கிரிவலப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டனவா? - ஐகோர்ட்டில் மாவட்ட நிர்வாகம் விளக்கம் - palani encroachments - PALANI ENCROACHMENTS

பழனி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டதால், அங்கு தற்போது எந்த கடைகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 6:18 PM IST

சென்னை: பழனி தேவஸ்தானம் சார்பில், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சட்ட விரோத கட்டுமானங்கள் மேற்கொள்ள நிரந்தர தடை விதிக்க வேண்டும் என கடந்த 2020ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிட உத்தரவிட்டது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் கிரிவலப்பாதையில் இருந்த கடைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், விஜயன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சுமார் 100 ஆண்டுகளாக அங்கே கடை நடத்தி வருவதாகவும், வருவாய் ஆவணங்களின் படி அந்த இடத்திற்கான பட்டா இருப்பதால், தன்னை அப்புறப்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை வெள்ளம்; 'கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலைகளை உருவாக்கலாமே'.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து!

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவில் நிலத்தில் எப்படி கடை நடத்த முடியும்? கிரிவலப்பாதையில் கடைகள் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி கடைகள் செயல்பட்டால் அதை உடனே மூட வேண்டும். உத்தரவை மீறி கடைகள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி பாலாஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட நீர்வாகம் தரப்பில், ஆக்கிரமிப்பு கடைகள் முழுவதும் அகற்றப்பட்டு விட்டதாகவும், எந்த கடைகளும் தற்போது இல்லை எனவும், வணிக ரீதியாக கடைகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.