ETV Bharat / sitara

கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்! - aishwarya rajesh to act as call taxi driver

கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் வித்தியசமான கதைக் களத்தில் நடிக்கும் 'டிரைவர் ஜமுனா' என்ற படம் மூன்று மொழிகளில் பிரமாண்டமாக தயாராகவுள்ளது.

Aishwarya Rajesh plays a cabbie in Driver Jamuna
கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்
author img

By

Published : Jan 10, 2021, 4:18 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அபார நடிப்பாற்றலால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர். இவரது கனா, காக்கா முட்டை போன்ற திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

தற்போது 'வத்திக்குச்சி' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி. செளத்ரி மிகப்பெரும் பொருள்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கவுள்ளார்.

Aishwarya Rajesh plays a cabbie in Driver Jamuna
கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்

படத்தின் கதையை கேட்டவுடனே, இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். 'டிரைவர் ஜமுனா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.

இந்தப் படம் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இன்று (ஜன. 10) ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க... மாஸ்டர் வெற்றிக்கு அண்ணாமலையாரை நாடிய படக்குழு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.