மணிகண்டன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் 'காக்கா முட்டை'. ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
வெற்றிமாறன், தனுஷ் இணைந்து தயாரித்த இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது. இத்திரைப்படம் வெளியாகி நேற்றுடன் (ஜூன் 5) ஆறு ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனையொட்டி ’காக்கா முட்டை’ படம் குறித்த நினைவுகளை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “நேரம் எப்படிச் சென்றுவிட்டது. காக்கா முட்டை திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. என் இதயத்திற்கு எப்போதும் நெருக்கமாக இருக்கும் ஒரு மைல்கல் படம்.
-
How time flies! Exactly on this day, 6 years ago, #KaakaMuttai released. A landmark film that will always remain close to my heart, it broke barriers and made my career soar! Immensely thankful 2 director @dirmmanikandan & producers @dhanushkraja & @VetriMaaran sir 4 this film pic.twitter.com/AnYUwRY9i5
— aishwarya rajesh (@aishu_dil) June 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">How time flies! Exactly on this day, 6 years ago, #KaakaMuttai released. A landmark film that will always remain close to my heart, it broke barriers and made my career soar! Immensely thankful 2 director @dirmmanikandan & producers @dhanushkraja & @VetriMaaran sir 4 this film pic.twitter.com/AnYUwRY9i5
— aishwarya rajesh (@aishu_dil) June 5, 2021How time flies! Exactly on this day, 6 years ago, #KaakaMuttai released. A landmark film that will always remain close to my heart, it broke barriers and made my career soar! Immensely thankful 2 director @dirmmanikandan & producers @dhanushkraja & @VetriMaaran sir 4 this film pic.twitter.com/AnYUwRY9i5
— aishwarya rajesh (@aishu_dil) June 5, 2021
தடைகளை உடைத்து என் வாழ்க்கையை உயர்த்திய படம் இது. இயக்குநர் மணிகண்டன், தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் ஆகியோருக்கு என்னுடைய நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் பொது நிவாரணநிதி: 'சாஹோ' தீம் இசையை ஏலம் விடும் ஜிப்ரான்