பசுமை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி தெலங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார் மரம் நடும் #GreenIndiaChallengeஐ சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்தச் சேலஞ்சில் மரக்கன்று ஒன்றை நட்டு, அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அது குறித்து எடுத்துச் சொல்லி, மரக்கன்றுகள் நடுவதற்குப் பிறரையும் தூண்ட வேண்டும்.
இந்த சேலஞ்சானது திரைப்பிரபலங்களிடம் பிரபலமாகியுள்ளது. தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு தொடங்கி தளபதி விஜய்வரை இந்த சேலஞ்சை ஏற்று செய்துமுடித்துள்ளனர். சமீபத்தில் இந்த சேலஞ்சை நடிகை ரகுல் ப்ரீத் சிங் செய்து முடித்திருந்தார்.
தற்போது இந்த சேலஞ்சை நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் செய்துமுடித்துள்ளனர். கேத்ரின் தெரசா இந்த சேலஞ்சை நடிகர்கள் சித்தார்த், அதர்வா, ஆரியா ஆகியோருக்கு விடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த சேலஞ்சை செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ரகுல் ப்ரீத் சிங் விடுத்த சவால் என்ன?