ETV Bharat / sitara

'மூடர்கூடம்' நவீனின் ஃபேவரைட் நடிகர் யார் தெரியுமா?

'மூடர்கூடம்' நவீன் இயக்கும் 'அக்னிச் சிறகுகள்' திரைப்படத்தில் நடித்திருக்கும் முக்கிய கதாபாத்திரத்தின் லுக் மற்றும் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது.

author img

By

Published : Nov 30, 2019, 10:52 AM IST

agni-siragugal-
agni-siragugal-

'மூடர்கூடம்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குநர் நவீன். இயக்குநர் மட்டுமல்லாது நடிகராகவும் வலம் இவர், 'அலாவுதீனின் அற்புத கேமரா' திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார்.

இதனிடையே விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய்யை வைத்து 'அக்னிச் சிறகுகள்' படத்தை நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் அக்‌ஷராஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர், தலைவாசல் விஜய், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் சென்றாயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இரு முன்னணி நடிகர்களை வைத்து நவீன் இயக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி சீனு என்ற காபாத்திரத்திலும், அக்‌ஷரா விஜி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி மற்றும் அக்‌ஷராவின் போஸ்டர்கள் தனித்தனியே சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சென்றாயனின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டாக்சி தல என்ற கதாபாத்திரத்தில் சென்றாயன் நடிக்கிறார். முன்னதாக மூடர்கூடம் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சென்றாயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். அவரது வித்தியாசமான நடிப்பு பலருக்கும் புதுவித அனுபவத்தைக் கொடுத்திருந்தது. இதனிடையே சென்றாயனின் அக்னிச் சிறகுகள் போஸ்டரைப் பகிர்ந்துள்ள இயக்குநர் நவீன், #மூடர்கூடம் தொடங்கி இன்று வரை ஸ்க்ரிப்ட் எழுதும்போது சென்றாயனை தவிர்க்க முடிவதில்லை என்னால் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது அடுத்த படங்களிலும், சென்றாயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பதை தெரிவிக்கும் வகையில் அவருக்கும் நவீனுக்குமாக நெருக்கத்தையும், நட்பையும் சுட்டிக்காட்டும் வகையில் இந்த ட்வீட் பதிவு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி... விளம்பரத்திற்காக இப்படியா புகைப்படம் எடுப்பிங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.