ETV Bharat / sitara

ஆமிர் கான் இடத்தைக் கைப்பற்றிய ஹிரித்திக் ரோஷன்?

author img

By

Published : Dec 26, 2020, 12:56 PM IST

சென்னை: ’விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக ஹிரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆமிர் கான்
ஆமிர் கான்

நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ’விக்ரம் வேதா’ படத்தின் அனைத்து ரீமேக் உரிமைகளும் தயாரிப்பாளர் சஷிகாந்த் பெற்றார். இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து சஷிகாந்த் தற்போது இப்படத்தை இந்தியில் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் பணிகள் நீண்ட நாள்களாக நடைபெற்றுவந்த நிலையில், முதலில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாரூக் கான், ஹிரித்திக் ரோஷன் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியைத் தழுவியதாகக் கூறப்பட்டது.

இறுதியில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஆமிர் கான் நடிக்கவுள்ளதாகப் படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியானது. ஆனால் படத்தில் தான் நடிக்க விரும்பவில்லை என்று கூறி ஆமிர் கான் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆமிர் கான் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக ஹிரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.