ETV Bharat / sitara

அடிச்சுத் தூக்கிய அஜித் பாட்டு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

author img

By

Published : Aug 13, 2021, 12:59 PM IST

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள, 'அடிச்சுத் தூக்கு’ பாடல் யூ-ட்யூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

அடிச்சு தூக்கு
அடிச்சு தூக்கு

நடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'விஸ்வாசம்'. ஃபேமிலி ஆடியன்ஸைக் குறிவைத்து வெளியான இப்படத்தை மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து ரசித்தனர்.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை குடும்பத்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது இப்படம். இதற்கெல்லாம் காரணம் இமானின் இசை தான். இதில் இடம்பெற்றுள்ள 'கண்ணான கண்ணே' பாடல் தேசிய விருது பெற்றது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற 'அடிச்சுத் தூக்கு' என்ற பாடல் தற்போது யூ-ட்யூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படத்தின் இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டரில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

இமான் ட்விட்
இமான் ட்வீட்

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட இந்தப் பாடலில் அஜித் இறுதியாக ஃபாஸ்ட் பீட்டிற்கு நடமாடி அசத்தியிருப்பார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் ஃபாஸ்ட் பீட்டிற்கு நடனமாடியது இன்றளவும் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக உள்ளது.

இதையும் படிங்க: 'ரௌடி பேபி' பாடலுக்கு குழுவினருடன் குத்தாட்டம் போடும் பிரபல நடிகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.