மலைப்பாம்புக்கு துருவ் விக்ரம் முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது 'ஆதித்ய வர்மா'. 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
இவருடன் பணிடா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'E4 என்டெர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ள, இப்படத்திற்கு ரதன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இதன் டீசர், பாடல்கள் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படம் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளநிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'படையப்பா' படத்தில் புற்றிற்குள் இருந்து பாம்பை எடுத்து முத்தம் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போன்று, துருவ் விக்ரம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் மலைப்பாம்பு ஒன்றை, தனது கழுத்தில் சுற்றியபடி அதன் தலையில் முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சிறிதும் பயமின்றி அதன் தலையில் பாசத்துடன் முத்தமிடும் துருவ் விக்ரமின், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிங்க: விளையாட்டு புள்ள 'ஆதித்ய வர்மா'வின் ஆட்ட தேதி அறிவிப்பு!