சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, விஜய் நடிப்பில் வெளியான 'சந்திரலேகா' என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர், பின் பட வாய்ப்புகள் குறைந்தையடுத்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமண வாழ்க்கையும் அவருக்கு சரிவர அமையதால் இரண்டு திருமணங்கள் விவாகரத்து ஆனாது. தற்போது வனிதா சிங்கிள் மதராக இரண்டு மகள்களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், வனிதா 'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின் கடந்தாண்டு ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி எலிசபெத் ஹெலன் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருப்பதால், இந்த திருமணத்திற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து திருமணமான சில தினங்களிலேயே வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்தனர்.
-
And...❤️❤️❤️❤️ @powerstarhere pic.twitter.com/UXKaFiNJic
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And...❤️❤️❤️❤️ @powerstarhere pic.twitter.com/UXKaFiNJic
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 21, 2021And...❤️❤️❤️❤️ @powerstarhere pic.twitter.com/UXKaFiNJic
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 21, 2021
தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் வனிதா பங்கேற்று வருகிறார். இந்நிலையில் வனிதா, பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைப்பார்த்த ரசிகர்கள், வனிதாவுக்கு அடுத்த திருமணமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இது வனிதாவும், பவர் ஸ்டார் சீனிவாசனும் நடிக்கும் படத்தின் ஸ்டில் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கும் எனக்கும் ஒரு தொடர்பு - 'பிக்பாஸ்' வனிதா