இந்தியாவில் 70 ஆண்டுகளாக நீடித்த அயோத்தி வழிபாட்டு தலம் தொடர்பான பிரச்னையை உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதி முடித்துவைத்தது. இதையடுத்து இன்று (ஆக.5) அயோத்தியில் ராமருக்கு கோயில் எழுப்பும் பணிகள் தொடங்கின.
![நெற்றியில் ராமர் உருவத்துடன் சுகன்யா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07:04:42:1596634482_sukanya-1_0508newsroom_1596634459_489.jpg)
பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர். இதன் ஒரு அங்கமாக சமூக வலைதளங்களிலும் ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளின் கீழ் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை சுகன்யா தனது நெற்றியில் ராமனின் உருவம் பதித்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.