ETV Bharat / sitara

யூ ட்யூப் சேனல்கள் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் - பவ

சென்னை: சமூக வலைதளங்களில் என்னை குறித்து கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் வதந்திகளை பரப்பிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ஸ்ரீரெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

actress Sri Reddy press meet about cyber Harassment

author img

By

Published : Feb 26, 2020, 7:34 AM IST

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகை ஸ்ரீரெட்டி தன்னை குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தெலுங்கு திரையுல துணை நடிகையான கராத்தே கல்யாணி, நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய இருவரும் பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் என்னைக் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் வதந்திகளை பரப்பிவருகின்றனர். எனக்கு உள்ள ஆண் நண்பர்கள் குறித்தும், அவர்களுடன் நான் பழகும் விதம் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசிவரும் அவர்கள், என்மீது பெட்ரோல் குண்டு வீசி எரிக்க வேண்டும் எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் எனது அனுமதியின்றி எனது சொந்த விஷயங்கள் தொடர்பாக பல யூ டியூப் சேனல்கள் கருத்துகளை வெளியிட்டுவருவதை நான் விரும்பவில்லை. அத்தகைய செயல்களில் இனி ஈடுபடுவோர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கவுள்ளேன். நடிகர் விஷால் குறித்து நான் பேசவில்லை என்றும் எனது நண்பரான விஷாலை குறித்துதான் பேசினேன். எனது கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் கராத்தே கல்யாணி, நடன இயக்குநர் ராகேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளேன். புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி

இதையும் படிங்க: இந்தியில் ரீமேக்காகும் 'சூரரைப் போற்று'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.