தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்துவருபவர், சஞ்சனா கல்ராணி. இவர் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் காரணமாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இந்நிலையில் சஞ்சனா நேற்று முன்தினம் (அக்.6) படத்தின் படப்பிடிப்பிற்காகக் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திரா நகரிலிருந்து வாடகை கார் மூலம் ராஜ ராஜேஸ்வரி நகருக்குச் செல்லவாடகை கார் புக் செய்தார்.
கார் ஓட்டுநரிடம் வாக்குவாதம்
அப்போது காரில் ஏசி அதிகமாக வைக்கச் சொல்லி சஞ்சனாவுக்கும், கார் ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சஞ்சனா தகாத வார்த்தையால், கார் ஓட்டுநரைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார் ஓட்டுநர், சூசை மணி காவல் நிலையத்தில், சஞ்சனா தன்னை தகாத வார்த்தையால் பேசியதாகப் புகார் அளித்துள்ளார்.
நான் யார் என தெரியவில்லை:
இதுகுறித்து சஞ்சனா கூறுகையில், "இந்திரா நகரிலிருந்து, ராஜேஸ்வரி நகர் செல்வதற்காக நான் வாடகை கார் சென்றேன். அப்போது நான் செல்ல வேண்டிய இடத்திற்குப் பதிலாக கார், வேறுதிசையை நோக்கிச் சென்றது.
அதனால் அவர் என்னைக் கடத்தி செல்வதாக நினைத்து ஓட்டுநரிடம் கேட்டேன். வாக்குவாதம் கூடச் செய்யவில்லை. சூசை மணிக்கு நான் நடிகை என்பது தெரியவில்லை. நான் ஒரு நடிகை என்பதால் தான் இந்த விவகாரம் பெரிதானது" எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து கார் ஓட்டுநர் சூசை மணி கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக மூன்று பேரை மட்டும் காரில் ஏற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சஞ்சானவுடன் மூன்று பேர் ஏறினார்கள். அதற்குக் கூட நான் ஒன்றுமே சொல்லவில்லை.
ஏசியை அதிகரிக்கும்படி கூறி சஞ்சனா கூறினார். அதற்கு நான் கரோனா பரவல் காரணமாக ஏசியை அதிகரிக்க மாட்டேன் என சொன்னேன். அதனால் சஞ்சனா என்னைத் தகாத வார்த்தையால் பேசினார். இதுதொடர்பான வீடியோவையும் காவல் நிலையத்தில் கொடுத்திருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’வந்தான்..சுட்டான்..ரிப்பீட்டு...’ வைரலாகும் சிம்பு வெர்ஷன்