விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல இரண்டு காதல்'. இப்படத்தில் நடிகை சமந்தாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில், பேருந்து படிகட்டில் சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி பயணம் செய்வது போன்று காட்சி எடுக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளத்தில் வைரலானது.
மேலும் இந்தக் காணொலிக்குப் பின்னணியில் கமலின் 'புன்னகை மன்னன்' படத்திலிருந்து 'வளையோசை' பாடல் இடம்பெற்று நெட்டிசன்களைக் கவர்ந்தது. இந்தப் படத்திற்குப் பின் சமந்தா சில காலம் திரையிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓய்வுக்குப் பின் சமந்தா அடுத்தடுத்து படங்களில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: ’அக்கினேனி பெயரை நீக்கியதற்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை...’ - நடிகை சமந்தா