ஹைதராபாத்: கணவர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கவுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளோடு நிறுத்திவிடாமல், பாலிவுட் படங்கள், டிவி சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் தனது திறமையை நிரூபித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
2003ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துகொண்ட இவர், முதன்முதலாக 1998ஆம் வெளியான 'சந்திரலோகா' படத்தில்தான் அவரை முதன்முதலில் சந்தித்துள்ளார்.
பின்னர் இருவருக்குமிடையே காதல் மலர்ந்து திருமணமும் செய்துகொண்டனர். திருமணத்துக்குப்பின் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் ரம்யா கிருஷ்ணன், கடைசியாக கணவர் வம்சி இயக்கத்தில் 2004இல் வெளிவந்த 'ஸ்ரீ ஆஞ்சநேயம்' என்ற படத்தில் நடித்தார்.
இதைத்தொடர்ந்து 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் கணவர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். வந்தே மாதரம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், அவிகா கேர் உள்ளிட்ட பலரும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.