கன்னட நடிகையான பிரிணிதா தமிழில் அருள்நிதி ஜோடியாக உதயன் என்ற படத்தில் அறிமுகமானார். இதைத் தொடந்து கார்த்தி ஜோடியாக சகுனி, சூர்யா ஜோடியாக மாஸ் ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாத நிலையில் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில், தனது சமூக வலைதளபக்கத்தில் விதவிதமான தன் படங்களை வெளியிட்டுவந்த பிரணிதா சமீபத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொதுவாக நடிகைகள் தாங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி, புதுமையான நடனம் போன்ற காணொலிகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக கருத்துகளை தெரிவிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
-
Strong women lift eachother up (quite literally!) acro yoga session with @shruthiyoga pic.twitter.com/yaKI5RFYEI
— Pranitha Subhash (@pranitasubhash) September 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Strong women lift eachother up (quite literally!) acro yoga session with @shruthiyoga pic.twitter.com/yaKI5RFYEI
— Pranitha Subhash (@pranitasubhash) September 17, 2019Strong women lift eachother up (quite literally!) acro yoga session with @shruthiyoga pic.twitter.com/yaKI5RFYEI
— Pranitha Subhash (@pranitasubhash) September 17, 2019
இதே பாணியில் தற்போது பிரணிதா 'ஆஸ்ட்ரோ யோகா' என்ற பெயரில் யோகா பயிற்சி மேற்கொள்ளும் காணொலியை வெளியிட்டிருக்கிறார். இதில், கீழே ஒரு பெண்ணை தண்டால் எடுக்கும் நிலையில் இருக்க வைத்து, அவர் மீது அதேபோன்று ஏறி நின்று யோகா செய்கிறார் பிரணிதா.
இந்தக் காணொலியை பதிவிட்டு, வலிமையான பெண் மற்றொருவரை உயரத்துக்கு அழைத்துச் செல்வார். (மிகவும் எளிதாக) என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகைகளின் போல் டான்ஸ், ஸ்கூபா டைவிங் வரிசையில் பிரணிதாவின் இந்த ஆக்ரோ யோகவும் தற்போது இணைந்துள்ளது.