கிரியேடிவ் எண்டர்டெயினர்ஸ் அண்டு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'கபடதாரி'. கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'காவலுதாரி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தில், சிபிராஜுக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார்.
நடிகர்கள் சத்யராஜ், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் டைட்டிலில் தொடங்கி, நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் 'விஸ்வரூபம்' படப்புகழ் பூஜா குமார் கபடதாரி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சத்யா திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சைமன் கிங் இசையமைக்கிறார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் கூறுகையில், 'கபடதாரி' படத்தில் பூஜா குமார் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம்.
இந்த கதாபாத்திரம் கதையை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உயர்த்துவதுடன், பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் ஒருசேர தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' மற்றும் ஆங்கிலப் படங்களில் பாராட்டுதலுக்குரிய வகையில் நடித்த பூஜா குமாருடன் பணியாற்ற படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்கிறது' என்றார்.
நவம்பர் முதல் தேதி படப்பிடிப்பு தொடங்கி, 2020 மார்ச் மாதம் உலகெங்கும் கபடதாரி படத்தை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.