ETV Bharat / sitara

உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரவை முனியம்மா - தமிழக அரசிடம் உருக்கமான கோரிக்கை!

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மாவின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு வழங்கப்பட்டுவரும் உதவித்தொகையை, தன் மகனுக்கு அளிக்குமாறு, தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Singer come Actress Paravai Muniyamma
author img

By

Published : Oct 24, 2019, 11:11 PM IST

தரணி இயக்கத்தில் வெளிவந்த நடிகர் விக்ரமின் தூள் படத்தில் ஜோதிகாவின் பாட்டியாக வந்து கலக்கி, தமிழ்த்திரையுலகில் பெரும் புகழைப் பெற்றவர் கலைமாமணி விருது வென்ற பரவை முனியம்மா.

"சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி..." என்ற ஒற்றைப் பாடலின் மூலம், தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் ஓங்கி ஒலித்தக் குரலையுடைய நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மா, நடிகர் விவேக்குடன் இணைந்து கலக்கிய 'காதல் சடுகுடு' திரைப்படத்தின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம்.

தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்துவந்த நடிகை பரவை முனியம்மாவிற்கு, மெல்ல சினிமா வாய்ப்புகள் குறைந்தும், அதேசமயம் உடல்நலன் குன்றியும் வந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு ஆறு லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகவும், மாதந்தோறும் 6,000 ரூபாய் உதவித்தொகையும் தமிழக அரசின் சார்பில் வழங்க உத்தரவிட்டார்.

இதன்பிறகு தொடர்ந்து, தமிழக அரசின் உதவித்தொகையைப் பெற்றுவந்த பரவை முனியம்மா, தனக்கு எதுவும் நேர்ந்துவிட்டால், தமிழக அரசு தனக்கு வழங்கிவரும் தொகையை தன் மாற்றுத் திறனாளி மகனுக்கு வழங்குமாறு சென்ற வருடம் கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது மிகவும் உடல்நலம் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தான் முன்பே கேட்டிருந்ததுபோல் அரசாங்கம் தனக்கு வழங்கிவரும் 6,000 ரூபாய் மாத உதவித்தொகையை தன் மகனுக்கு வழங்குமாறு மீண்டும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:

உங்களின் வருகையால் எங்களின் இல்லத்தில் மகிழ்ச்சி - 'ஜாங்கிரி' மதுமிதா

Intro:Body:

Singer and actress Paravai Muniyamma had gained huge popularity after acting in Chiyaan Vikram's Dhool directed by Dharani, and she had sung the hit song Singam Pola Nadandhu Varaan, following which she had been signed to sing and act in many Tamil movies.

She went on to act in many movies like Kadhal Sadugudu, Sanda etc but however slowly she started losing offers, and she had been ill, following which former TN CM Jayalalitha had given 6 lakhs rupees as fixed deposit and monthly rupees 6000 on behalf of TN govt top her.

Last year itself she had made a request to TN govt to give the money to her physically challenged son if anything happens to her, and now yet again she has been admitted in hospital fighting for life, and has now again requested government to give the monthly 6000 rupees to her son after her death.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.