ETV Bharat / sitara

ஆறு மாத உழைப்பு - கிளிமஞ்சாரோ சென்ற ரஜினி மகள் - நிவேதா தாமஸ்

ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோவிற்கு நடிகை நிவேதா தாமஸ் சென்றுள்ளார்.

ரஜினி மகள்
ரஜினி மகள்
author img

By

Published : Oct 25, 2021, 12:12 PM IST

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதா தாமஸ், நவீன சரஸ்வதி சபதம் படம் மூலம் நாயகியாக அறிமுகமினார்.

இதனையடுத்து விஜய்யுடன் ஜில்லா, பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தர்பார் படத்தில் ரஜினியின் மகள் பாத்திரத்திலும் சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார்.

இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோ சிகரத்திற்குச் சென்றுள்ளார். 5.895 அடி கொண்ட இந்த மலை ஏறுவதற்காக அவர் சுமார் 6 மாதங்கள் பயிற்சி எடுத்து முறையாகச் சென்றுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை நிவேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நம் இந்தியத் தேசியக் கொடியுடன் அவர் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

நிவேதா தாமஸ், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாக நடித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: 'விருதை எதிர்பார்க்கவில்லை, கே.பி. சார் இல்லாதது வருத்தம்'- தாதா சாகேப் ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.