மும்பை: நடிகர் ஷாகித் கபூருடன் கபிர் சிங் படத்தில் நடித்துப் பிரபலமானவர் நிகிதா தத்தா. இவர் ஏற்கனவே 'கோல்டு', 'லஸ்ட் ஸ்டோரீஸ்' உள்ளிட்ட பல படங்களிலும் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
நிகிதா தத்தா செவ்வாய்க்கிழமை (நவம்பர் 30) மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் இரவு நடந்துசென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவர் கையிலிருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "மும்பை பாந்த்ரா பகுதியில் நான் நடந்து சென்றபோது பைக்கில் வந்த இருவரில், ஒருவர் என் தலையில் தட்டினார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
பின்னால் இருந்தவர் என் கையிலிருந்த செல்போனை பறித்து ஓடினார். நான் கண் இமைக்கும் நேரத்தில் இந்தச் செயல் நடந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன்.
இது போன்ற விஷயம் மற்ற யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. நான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து வாங்கிய செல்போன் இப்படி பறிப்போய்விட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரபல நடிகையை தாக்கி செல்போன் பறிப்பு