ETV Bharat / sitara

நஷ்ட ஈடு தராவிட்டால் விஜய் டிவி பிரச்னையை சந்திக்க நேரிடும் - மீரா மிதுன்

நான் அரசியலுக்கு வரவுள்ளேன். அதிமுக கட்சி, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சிறப்பாக இருந்தது. இப்போது ஆண் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது.  எனக்கு கொடுக்க வேண்டிய பணம் தரவில்லை என்றால் விஜய் டிவி பிரச்னையை சந்திக்க நேரிடும் என மாடலும், நடிகையுமான மீரா மிதுன் கூறியுள்ளார்.

நடிகை மீரா மிதுன்
author img

By

Published : Nov 2, 2019, 8:08 PM IST

சென்னை: சில காரணங்களால் மும்பை சென்றிருந்த மீரா மிதுன் தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்து பல விஷயங்களை பேசினார்.

சென்னை எழும்பூரில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை நடிகை மீரா மிதுன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது சுஜித் இறப்புக்காக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்திய பின் பேசினார்.

40 நாட்கள் நான் இங்கு இல்லை. என்னைப் பற்றி பல்வேறு தகவல்கள் வலைதளங்களில் உலா வருகின்றன. காவல் துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நான் வேறு மாநிலத்துக்கு சென்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இங்கு நியாயம் கிடைக்காமல் பெரிய இடத்துக்கு சென்றால்தான் கிடைக்கும் என்றால் அங்கு செல்வேன். ஆனால், அப்படி சென்றால் தமிழ்நாட்டிற்கு அசிங்கம்.

என் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இரண்டுமே பொய்யானவை. என்னிடம் எந்த விசாரணையும் செய்யாமல் வழக்கு பதிவு செய்தார்கள். லஞ்சம் வாங்கிக் கொண்டு, வழக்கு பதிவு செய்கிறார்கள். இங்கே சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு காரணமான காவல் துறையினர், எனது அடுத்தகட்ட நடவடிக்கையால் நிச்சயமாக பணியில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள்.

விஜய் டிவி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடியும் வரை என்னை பயன்படுத்திக்கொண்டு, இப்போது எனக்கு முறையாக பதில் அளிக்கவில்லை. எனக்கு வரவேண்டிய முழுமையான தொகைவரவில்லை. சேரன் விவகாரத்தில் நான் இந்த நிகழ்ச்சி குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். அப்படி அளித்து நிகழ்ச்சியை நிறுத்தினால்தான் எனக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கும் என நினைக்கிறேன்.

விஜய் டிவி தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்னிடம் கெஞ்சினார். அதற்காகதான் குறைவான தொகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். என்னிடம் முறையாக குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ச்சிக்கான தொகையை தருகிறேன் என கூறலாம். ஆனால் அவர்கள் எதையும் கூறவில்லை. எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. அட்வான்ஸ் கூட வாங்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். 'பிக் பாஸ்' வீட்டில் மொத்தம் 35 நாட்கள் இருந்தேன். இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நான் யாரிடமும் உறவாடவில்லை. பழகவும் இல்லை. என் தொலைப்பேசி எண்ணும் யாரிடமும் இல்லை. அங்கிருந்த சரவணன் நல்ல நபர். அவரிடம் மட்டும் பேசியுள்ளேன்.

உயிருக்கு பயந்து நான் மும்பையில் இருந்தேன். மும்பை, கேரளா , கர்நாடக காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுகின்றனர். அங்கிருப்பது பாதுகாப்பாக உள்ளது. தற்போது மும்பையில் குடியேறிவிட்டேன்.

நான் அரசியலுக்கு வரவுள்ளேன். அதிமுக கட்சி, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சிறப்பாக இருந்தது. இப்போது ஆண் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. பெண்கள் அமைச்சராக பதவிக்கு வரவேண்டும்,

எனக்கு எதிராக செயல்பட்ட அதிகாரிகள், அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள், இதன் பின்னரும் எனக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் விஜய் டிவி பிரச்னையை சந்திக்க நேரிடும். நான் வாங்கிய பட்டங்கள் பொய்யானவை என்றால் என்னால் பயிற்சி பெற்று பட்டம் பெற்றவர்களிடமும் திரும்ப பெறுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Intro:மீரா மீதுன் செய்தியாளர் சந்திப்பு Body:நடிகை மீரா மிதுன் சென்னை எழும்பூரில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் இன்று பத்திரிகையாளரை சந்தித்துப் பேசினார் அப்போது
சுர்ஜித் இறப்பிற்காக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்திய பின் பேசினார்.
40 நாட்கள் நான் இங்கு இல்லை அதனால் இந்த செய்தியாளர் சந்திப்பு , என்னை குறித்த பல்வேறு தகவல்கள் வலைதளங்களில் உலா வருகின்றன. காவல்துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நான் வேறு மாநிலத்திற்கு சென்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இங்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இதை விட பெரிய இடத்திற்கு சென்றால் கிடைக்கும் என்றால் செல்வேன். ஆனால், அப்படி சென்றால் தமிழகத்திற்கு அசிங்கம், என் மேல் இரண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது இரண்டுமே பொய்யானவை, என்னிடம் எந்த விசாரணையும் செய்யால் பதிவு செய்தார்கள், லஞ்சம் வாங்கி கொண்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள் . படத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு காரணமான காவல்துறையினர் எனது அடுத்த கட்ட நடவடிக்கையால் நிச்சயமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப் படுவார்கள்.

விஜய் டிவி, நிகழ்ச்சி முடியும் வரை என்னை பயன்படுத்திக்கொண்டு இப்போது எனக்கு முறையாக பதில் அளிக்கவில்லை, எனக்கு வரவேண்டியது முழுமையாக தொகை வரவில்லை.

சேரன் விவகாரத்தில் நான்
இந்த நிகழ்ச்சியை குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். அப்படி அளித்து நிகழ்ச்சியை நிறுத்தினால் தான் எனக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கும் என நினைக்கிறேன்,

விஜய் டிவி தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்னிடம் கெஞ்சினார். அதற்காக தான் குறைவான தொகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்,என்னிடம் முறையாக குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ச்சிக்கான தொகையை தருகிறேன் என கூறலாம் எதையும் கூறவில்லை, எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. அட்வான்ஸ் கூட வாங்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மொத்தம் 35 நாட்கள் இருந்தேன். இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் யாரிடமும் உறவாடவில்லை பழகவும் இல்லை. என் எண்ணும் யாரிடமும் இல்லை, சரவணன் நல்ல நபர் அவரிடம் மட்டும் பேசியுள்ளேன்,

உயிருக்கு பயந்து நான் மும்பையில் இருந்தேன் மும்பை, கேரளா , கர்நாடக போலிசார் சிறப்பாக பணியாற்றுகின்றனர் பாதுகாபாகவுள்ளது , மும்பையில் குடியேறிவிட்டேன். நான் அரசியலுக்கு வரவுள்ளேன்,

அதிமுகவில் ஜெயலலிதாவில் இருந்த போது சிறப்பாக இருந்தது , இப்போது ஆண் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. பெண்கள் அமைச்சர் பதவிக்கு வரவேண்டும்,

எனக்கு எதிராக செயல்பட்ட அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள், இதன் பின்னரும் எனக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் விஜய்டிவி சேனல் முழுவதும் பிரச்சனையை சந்திக்க நேரிடும்

Conclusion:நான் வாங்கிய பட்டங்கள் பொய்வானவை என்றால் என்னால் பயிற்சி பெற்று பட்டம் பெற்றவர்களிடமும் திரும்ப பெறுங்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.