மலையாளத்தில் இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியான படம் 'டைம்'. இதில் குணச்சித்தர நடிகையாக அறிமுகமானவர் மாலா பார்வதி. மலையாளத்தில் சிறந்த நடிகைகளை பட்டியலிட்டால் மாலா பார்வதி அதில் இருப்பார்.
மாலா பார்வதி தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானார். அதன்பின் இவர் 'நிமிர்', 'கேம் ஓவர்', 'வாயை மூடி பேசவும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சைக்காலஜிஸ்ட்டான இவருக்கு ஆரம்பத்தில் சினிமா மீது ஆர்வம் இல்லை. ஆனால் இவர் நடித்த படங்களை பார்த்த இயக்குநர்கள் தங்களது படத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டி வரிசையில் நின்றனர். பின் அந்த தொழிலை விட்டு முழுநேர நடிகையாக மாறினார்.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்', ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள 'மரைக்கார்' படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால், நானி, மாதவன், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த இவர் தமிழில் சிறந்த நடிகையாகவும் தவிர்க்க முடியாத அம்மாவாக வலம் வேண்டும் என்பதே விருப்பம் என கூறியுள்ளார்.