தமிழ் திரையுலகப் பிரபலங்களில் அதிகப்படியாக ட்விட்டர் தளத்தை உபயோகிப்பவர் என்றால் அது குஷ்பு தான். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருக்கும் இவர், அடிக்கடி தனது கட்சி சார்ந்து ட்வீட் வெளியிட்டுவருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து, நடிகை குஷ்பு ட்வீட் செய்து வந்தார். அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக குஷ்புவிடம் இருந்து எந்த ஒரு ட்வீட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், குஷ்பு தனது ட்விட்டர் கணக்கை முடக்க யாரோ முயற்சி செய்ததாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அதில், ”என்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது அல்லது பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டது, என்று ட்விட்டர் எனக்கு ஒரு செய்தி அனுப்பியது. மூன்று முறை, மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து எனது கணக்குக்குள் நுழைய யாரோ முயன்றுள்ளனர். கடந்த 48 மணி நேரங்களாக, என்னால் எனது கணக்கிற்குள் நுழைய முடியவில்லை. கடவுச் சொல்லும் மாற்ற முடியவில்லை.
அதேபோன்று, ட்விட்டர் தரப்பிலிருந்து உரிய உதவி இன்னும் கிடைக்கவில்லை. எனது கணக்கு ரத்தாக வாய்ப்புகள் உள்ளன என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புக்கு ரூ 1.25 கோடி வழங்கிய 'தல' அஜித்