நடிகை கத்ரீனா கைஃப் சமையல் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் தாக்கத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து மொழி படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலிருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட செயல்பாடுகளை ரசிகர்களுக்கு, தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக நடிகைகள் பலரும் சமையல் செய்யும் வேலையில் களமிறங்கியுள்ளனர். அந்தவகையில் நடிகை கத்ரீனா கைஃப் சீஸ் வெட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கத்தியின் இரண்டு முனையையும் பயன்படுத்தி அவர் சீஸ் வெட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்ரீனா தனது தங்கையுடன் இணைந்து பேன் கேக் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார். கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள ’சூரியவன்ஷி’ திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியாவதாக இருந்ததது. ஆனால் கோவிட்-19 காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிரமப்படாமல் அசால்ட்டாக நடிப்பவர் இர்ஃபான் - சச்சின்!