இந்திய அளவில் கரோனா தொற்றால் பல ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உற்றார், உறவினர்களை இழந்தோரின் ஓலம் ஓய்ந்தபாடில்லை. மத்திய, மாநில அரசுகள் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அறிவித்தும் தொற்றுப் பரவல் குறைபாடில்லை.
கரோனாவை எதிர்கொள்வதற்கான முதல் ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என சுகாதார துறையினர் தெரிவித்து வருகின்றனர். இதனால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வத்தை மக்களிடம் தூண்டும் வகையில், பல்வேறு திரை பிரபலங்களும் கரோனா தடுப்பூசிகளை செலுத்தி அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ஜனனி தனது கரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திய புகைப்படத்தை, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இவர் சமூக வலைதளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த ஜாதி பெயரை நீக்கி பல்வேறு தரப்பினரின் பாராட்டடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : #HBD சத்யன்: ஹே தோத்தாங்குளீஸ் ஹாவிங் ஃபன்னா... "பிறந்தநாள் வாழ்த்துகள் சைலன்சர்"