ETV Bharat / sitara

'லாக்டவுன் மட்டும் இனி இல்லைனா... என் ஆட்டம் வெறித்தனமா இருக்கும்' - 'காலா' நாயகியின் வீடியோ!

'தேசிய ஊரடங்கு இனி இல்லை' என அறிவிப்பு வந்தால், என்னுடைய டான்ஸ் இப்படித்தான் இருக்கும் என நடிகை ஹூமா குரேஷி ஆடிய காணொலி, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Huma Qureshi
Huma Qureshi
author img

By

Published : May 21, 2020, 4:27 PM IST

உலகப்பெருந்தொற்றான கரோனா இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய அரசு நான்காம்கட்ட தேசிய ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், நாடு முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இனி, ஊரடங்கு இருக்காது என நம்பப்படுகிறது.

இந்த தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் தங்களது சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி, காணொலிகளையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 'காலா' படத்தில் ரஜினியின் காதலியாகத் தோன்றிய பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, 'இனிமேல் லாக்டவுன் இல்லை என அறிவிப்பு வந்தால், என்னுடைய டான்ஸ் இப்படித்தான் இருக்கும்' என்று கூறி, இந்திப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஹூமா குரேஷியின் இந்த நடன காணொலி, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: தல 'வலிமை'க்காக தீவிரமாக பைக் ஓட்டும் பயிற்சியில் 'காலா' நாயகி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.