டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடந்ததையடுத்து பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ரஞ்சித் தனது கருத்தினை பதிவு செய்தார். அதில் 'தேசத்தின் தலைநகரத்தில் பாசிச இனவாத சக்திகள் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதை பார்ப்பது வருத்தமளிக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த நாட்டை அடிப்படைவாதத்திற்கு திருப்புகிறது, தமிழ்நாட்டிலும் அடிப்படைவாதத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. இந்தப் பாசிசத்திற்கு எதிராக நாம் ஒன்றுபடுவோம்' என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ரஞ்சித்தின் பதிவை குறிப்பிட்ட நடிகை காயத்ரி ரகுராம், 'மதச்சார்பின்மைக்கு அர்த்தம் என்ன? மதச்சார்பின்மை இந்துக்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? இங்கிருக்கும் ஊழலை பாஜக சரிசெய்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் உங்களைப்போல் பெரியாரிஸ்ட் கூலிகள் தமிழ்நாட்டில் இந்து மதத்தை அழித்து வருகின்றனர். காங்கிரஸ் பாகிஸ்தான் கைக்கூலிகள் இந்தியாவில் இந்துக்களை அழித்துவருகின்றனர். முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு அவர்களை காட்டிக்கொடுத்து வாக்குகளுக்காக இந்துக்களிடம் அழுவது நீங்கள்தான். உங்கள் சகோதரர் விசிக என்பது எனக்குத் தெரியும். திரைத்துறையை திருமா மோசமாக சாடியபோது எங்கே போனீர்கள். உங்கள் அரசியல் இரண்டு முகம் கொண்டது' என்று பதிவிட்டுள்ளார்.
-
What is the meaning of secularism? Is secularism apply only to Hindus? BJP is correcting the corrupt system. Because u Periyarist coolie mamas are destroying the hindu religion in Tamil Nadu. Congress pakistan kai coolies destroying Hindus in India. It’s u who provoke Muslims 1/2 https://t.co/grkAz4FI3c
— Gayathri Raguramm (@gayathriraguram) February 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What is the meaning of secularism? Is secularism apply only to Hindus? BJP is correcting the corrupt system. Because u Periyarist coolie mamas are destroying the hindu religion in Tamil Nadu. Congress pakistan kai coolies destroying Hindus in India. It’s u who provoke Muslims 1/2 https://t.co/grkAz4FI3c
— Gayathri Raguramm (@gayathriraguram) February 26, 2020What is the meaning of secularism? Is secularism apply only to Hindus? BJP is correcting the corrupt system. Because u Periyarist coolie mamas are destroying the hindu religion in Tamil Nadu. Congress pakistan kai coolies destroying Hindus in India. It’s u who provoke Muslims 1/2 https://t.co/grkAz4FI3c
— Gayathri Raguramm (@gayathriraguram) February 26, 2020
இதையும் படிங்க: 'திரைப்படங்கள் ஏற்படுத்தும் உரையாடல்களால் புரட்சிகரமான மாற்றம் ஏற்படுகிறது' - திருமாவளவன் பேச்சு