படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை, படத்தின் கதைதான் முக்கியம் என்பதை நம்புபவர் ஆண்ட்ரியா. வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வுசெய்து நடித்துவரும் ஆண்ட்ரியா தற்போது ஃபேன்டஸி படத்தில் நடித்துவருகிறார்.
'துப்பாக்கி முனை' திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கும் ஃபேன்டஸி படத்தில் ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை தியாகராய நகரில் நடைபெற்றுவருகிறது.
இதில் ஆண்ட்ரியாவுடன் நடிகை சுனைனா, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இந்தியாவின் முதல் கடல் கன்னி படமாக உருவாகும் இந்தப் படம் வரும் கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தனுஷின் வாத்தி படப்பிடிப்பு தொடக்கம்!