ETV Bharat / sitara

யோகிபாபுவுக்கு திடீர் திருமணம்! - நகைச்சுவை நடிகர் யோகிபாபு

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இன்று காலை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

Actor Yogi Babu got married
Actor Yogi Babu got married
author img

By

Published : Feb 5, 2020, 8:42 AM IST

நகைச்சுவை நடிகர் யோகிபாபு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று (05-02-2020) திருமணம் செய்துகொண்டார். அவரது குலதெய்வக் கோயிலில் மஞ்சு பார்கவிக்கும் யோகிபாபுவுக்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்தது.

தனது திருமணப் புகைப்படத்தை பகிர்ந்துள்ள யோகிபாபு, வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை சபீதா ராய் என்பவருக்கும், யோகிபாபுவுக்கும் இடையே காதல் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டுவந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெற்றோர் பார்த்த பெண்ணை இன்று கரம்பிடித்துள்ளார் யோகிபாபு. தற்போது யோகிபாபு திருமணம் செய்துள்ள மஞ்சு பார்கவி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர்.

Actor Yogi Babu got married
திருமணம் செய்தார் யோகிபாபு

தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்துள்ள முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு, ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

யோகிபாபு நடிப்பில் வரும் மாதங்களில், மண்டேலா, கடைசி விவசாயி, வெள்ளை யானை, காக்டெய்ல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க...

யோகிபாபுவின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

Intro:Body:

Actor Yogi Babu got married

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.