பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கடந்த 2009ஆம் ஆண்டு சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் நடிப்பில் வெளியான 'யோகி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடக்கத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அவர், டிகே இயக்கத்தில் வெளியான 'யாமிருக்க பயமே' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
பின்பு நயன்தாரா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களான கோலமாவு கோகிலா, காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், யோகிபாபு - மஞ்சு பார்கவி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் உடல் நல்லடக்கம்