ETV Bharat / sitara

ஜுவாலா வெளியிட்ட ட்வீட்: உறுதியானது விஷ்ணு விஷாலின் இரண்டாவது காதல்! - vishnu vishal love

பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, நடிகர் விஷ்ணு விஷால் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உறுதியானது விஷ்ணு விஷாலின் இரண்டாவது காதல்!

author img

By

Published : Feb 16, 2020, 8:43 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'ராட்சசன்' திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினி நடராஜை கடத்த 2018ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதற்கு மிக முக்கியக் காரணம் விஷ்ணு, முன்னாள் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவிடம் நெருங்கி பழகியதுதான் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த சில நாள்களாக விஷ்ணு, ஜுவாலா ஆகியோர் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதை இருவருமே உறுதி செய்யவில்லை. இருப்பினும் அடிக்கடி பொது இடத்திற்கு இருவரும் ஒன்றாக சென்றுவந்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ஜுவாலா கட்டா, தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, என்னுடைய காதலர் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து இவர்கள் காதலிப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள், விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்தும், சிலர் எதிர்மறையாக விமர்சனமும் செய்தனர்.

இதையும் படிங்க: ரொமாண்டிக் படமானாலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் - 'ஓ மை கடவுளே' படக்குழு பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.