கரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்குப் பலரும் உதவி செய்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள விஷாலின், தங்கை மருத்துவர் நீஷ்மா அங்குள்ள மருத்துவமனைகளுக்கு கரோனா பிபிஇ செட்களை இலவசமாக வழங்கினார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவமனைகளுக்கும், மருந்துகள் வழங்குமாறு விஷால், தனது தங்கைக்கு கோரிக்கை வைத்தார்.
அக்கோரிக்கையை ஏற்று, மருத்துவர் நீஷ்மா உடனே MMC மருத்துவமனைக்கு, 200 பிபிஇ உபகரணங்களை வழங்கியுள்ளார். இவரின் இந்த சேவையைப் பலரும் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: இத்தாலி சினிமாவில் மீண்டும் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்!