ETV Bharat / sitara

முழு 'ஆக்‌ஷன்' கமாண்டராக மாறிய விஷால்!

author img

By

Published : Aug 16, 2019, 12:09 PM IST

'ஆக்‌ஷன்' திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஷால் அதிரடி காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

action

காமெடி, குடும்ப படம், திரில், ஆக்‌ஷன் என அனைத்து ஜனார்களையும் கலக்கியவர் இயக்குநர் சுந்தர்.சி. இவரும், நடிகர் விஷால் கூட்டணியில் ஏற்கனவே 'ஆம்பள' திரைப்படம் வெளியானது. தற்போது சுந்தர்.சியும், விஷாலும் மீண்டும் இணைந்துள்ளனர். முழு நீள ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு 'ஆக்‌ஷன்' என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டராக நடிக்கிறார். இதில் ஒரு உண்மையை கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்‌ஷன்,சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அமைத்துள்ளனர்.

இப்படத்தில் அமைக்கப்பட்டிருந்த பல அதிரடி காட்சிகளிலில் விஷால் டூப் இல்லாமல் நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி (TURKEY), அசார்பைசான் (AZARBAIZAN) ,கேப்படோசியா (CAPPADOCIA) , பாகு (BAKU) , இஸ்தான்புல் (ISTANBUL) தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு (KRABI ISLAND), பேங்காக் போன்ற இடங்களில் நடைப்பெற்றது.

அதேபோல் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ், டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு ,ராம்கி ,சாயாசிங்,ஷாரா, பழ .கருப்பைய்யா , பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் தற்போது படக்குழு மேற்கொண்டு வருகிறது. விரைவில் படத்தின் வெளியிட்டு தேதி, ட்ரைய்லர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Intro:விஷால் - சுந்தர் .சி இணையும் “ஆக்‌ஷன்“ படம்.Body:காமெடி ,குடும்ப படம் ,திரில் ,ஆக்‌ஷன் என அனைத்திலும் வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர் .சி . இவரது இயக்கத்தில் மீண்டும் “ஆக்‌ஷன்” படம் .இது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்‌ஷன் படமாக உருவாக்கி வருகிறது .இதற்கு “ஆக்‌ஷன்” ( ACTION ) என்றே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது .

விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார் .ஒரு உண்மையை கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார் .அங்கே ஆக்‌ஷன்,சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அமைத்துள்ளார்கள் .சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள் இதில் பல காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நடித்துள்ளார் பிரம்மாண்ட படைப்பான இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி TURKEY நாட்டில் அசார்பைசான் AZARBAIZAN ,கேப்படோசியா CAPPADOCIA , பாகு BAKU , இஸ்தான்புல் ISTANBUL ,தாய்லாந்து நாட்டில் கிராபி தீவு KRABI ISLAND , பேங்காக் போன்ற இடன்களில் 50 நாள்களும் மேலும் இந்தியாவில் 50 நாள்கள் ஜெய்ப்பூர் ,ரிஷிகேஷ் ,டேராடூன் ,ஹைதராபாத் ,சென்னை ,போன்ற இடங்களிலும் பரபரப்பாக படமாக்கப்பட்டது . விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார் .மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் இதன் மூலம் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு ,ராம்கி ,சாயாசிங்,ஷாரா, பழ .கருப்பைய்யா , பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

.

Conclusion:இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது .போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.