தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'டெம்பர்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படம் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் வெங்கட்மோகன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் 'அயோக்யா' என்று தமிழில் ரிமீக் ஆகியுள்ளது. படத்தில், விஷால் ராக்ஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். பல இடையூறுகளுக்குப் பிறகு வெளியான அயோக்யா திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பார்த்திபன், 'அயோக்யா' திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "அயோக்கியா'த்த்தனம் 94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே' படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி, தமிழிலும் தற்போது அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு'அ-தனம்? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு அயோக்யா படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து தான் பதிவு செய்த ட்விட்டிற்கு பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். இதில், 'Mr vishalக்கும் எனக்கும் என்றுமே பிரச்னை இல்லை! இப்போதும் வழக்காட வரவில்லை. வழக்கமான என் (100%உண்மையான) அக்மார்க் அக்குறும்பே! கெட்ட போலீஸ், ஒரு நல்ல போலீஸால் திருந்துவதன் விளை(யும்)வுகள்! இந்த மையக் கரு இரண்டிலும் ஒன்றே! Doubt-ன்னா பாருங்க .... yeah AYOGYA!' என்று பதிவிட்டுள்ளார்.