சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய தேவையின்றி, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கரோனவை தடுக்கும் முயற்சியாக கிராமங்களில் உள்ள இளைஞர்கள் சிலர் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விமல் தனது சொந்த கிராமமான திருச்சி மாவட்டத்தில் உள்ள பன்னாங்கொம்பு பகுதியில் இளைஞர்கள் சிலருடன் இணைந்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
விமலின் இந்தச் செயலைக் கண்டு அக்கிராம மக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: தேசிய நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை வழங்கிய அக்ஷய் குமார்!