தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் இதுவரை நடித்திருந்தாலும், தனக்கென தனி இடத்தைப் பிடிக்க இன்று வரை விடாமல் போராடி வருபவர் விக்ராந்த்.
தன் நடிப்பில் எந்த ஒரு குறையும் வைக்காமல் விக்ராந்த் நடித்துவருகிறார். இருப்பினும் அவரின் ஒரு சில படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. நடிகர் விஜய்யின் சித்தப்பா மகன் தான் விக்ராந்த்.
இவர் கடைசியாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் நடிகர் விக்ராந்த் இன்று (நவ.13) தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவர் தனது மனைவி, நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 'பீஸ்ட்' பட செட்