பக்ரீத் படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி?
நான் எதிர்பார்ப்போடுதான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் ஒட்டகம் முதல்முறையாக நடித்துள்ளது. ஒட்டகத்தை ஒரு கதாபாத்திரமாக வைத்துக்கொண்டு மற்றொரு கதை நிகழாது. இந்தக் கதையின் மைய கருவே ஒட்டகத்துக்கும், எனக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப்பை மையமாகக் கொண்டதுதான். இதற்காக, 40 நாள் முன்கூட்டியே ஒட்டகத்தை வர வைத்து அதனுடன் பழகினேன். படம் முழுக்க ஒட்டகம் குறித்த கதை என்பதால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
ஒட்டகத்துடன் நடித்த அனுபவம் பற்றி?
ஆரம்பத்தில் ஒட்டகம் எட்டி உதைக்கும். முன்னாடி போய் நின்றால் கடிக்க முயற்சி பண்ணும். இப்படி இரண்டு வாரங்கள் நடந்தது. அதன் பிறகு நான் போனால் என்னை பார்க்கும். அருகில் வந்து என் மீது தலையை சாய்த்துக் கொள்ளும்.
ஒட்டகம் இந்த அளவுக்கு உங்களிடம் பழக காரணமாக அமைந்தது எது? என்னுடன் இருந்த அந்த 40 நாட்களிலும் அதற்கான உணவை நான்தான் அளித்தேன். ஒட்டகத்தின் பயிற்சியாளர் என்னவெல்லாம் செய்கிறாரோ, அதையெல்லாம் அவரை தவிர்த்து நானே செய்தேன். அதன் பிறகு என் உடல் வாசனையை அறிந்து என்னுடன் நன்றாக பழக ஆரம்பித்தது.
இந்தக் கதையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?என்னைக்குமே எமோஷனல் விஷயங்கள் தோல்வி அடையாது. இதற்கு, எடுத்துக்காட்டாக நிறைய படங்களைக் கூறலாம். இந்த படத்தில் ஒரு மனிதனுக்கும், விலங்குக்கும் உள்ள எமோஷனல் அம்சம்தான் கதை களமாக இருந்தது. விலங்கோடு ஒரு பயணக் கதை இதுவரை வந்ததில்லை. இதெல்லாம்தான் 'பக்ரீத்' படத்தில் நடிப்பதற்கு எனக்கு முக்கியமாகத் தெரிந்தது.
இந்த கேரக்டரில் நடிப்பதற்காக ஹோம்வொர்க் செய்தீர்களா?
இயக்குநர் என்னிடம் கூறினார் இந்தப்படத்தில் நீங்கள் விக்ரந்தா தெரியக்கூடாது. ரத்தினமாகதான் தெரிய வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே உடல் எடையை குறைக்க வேண்டும், லுக்கை மாற்ற வேண்டும் என்றார். அது மட்டுமல்லாமல் நான் எந்தக் காஸ்ட்யூம் போடுகிறேனோ அதே காஸ்ட்யூமில் தான் எப்பொழுதும் இருந்தேன். ஒட்டகத்தை வளர்த்த வரை அதிகளவில் கண்காணித்து, அவர் எப்படி நடக்கிறார் அவர் குழந்தையை எப்படி பள்ளிக்கு கொண்டு செல்கிறார் என்பதை கவனித்தேன். இந்தப் படத்தில் மேக்கப் எதுவும் பயன்படுத்தவில்லை. அதனால் நான் இந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறி விட்டேன்.
படத்தில் எத்தனை ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டது?
மூன்று ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டது. ஒன்று குட்டி மற்றொன்று மிடில் ஏஜ். அதன்பிறகு முழு வளர்ச்சி அடைந்த ஒரு ஒட்டகம். இந்த ஒட்டகம் படம் முழுவதும் என்னுடன் நடித்தது. படக்குழுவினர் அனைவரிடமும் நன்றாகப் பழகிவிட்டது. அதனால் படப்பிடிப்பில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.
எந்தப் பகுதியில் ஷூட்டிங் நடைபெற்றது?
சென்னைக்கு அருகே புழல், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதுபடத்தை பார்த்து பிரபலங்கள் பாராட்டினார்களா?விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், உதயநிதி ஸ்டாலின் இப்படி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் பார்த்து பாராட்டினார்கள். அவர்கள் கூறியது எல்லாம் ஒன்றுதான். இந்தப் படம் மிகவும் நன்றாக உள்ளது. படம் எனக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்கள்.
உங்களுடைய அடுத்த படம் பற்றி...
நானும், விஷ்ணு விஷாலும் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறோம். இப்படத்துக்கு விஜய் சேதுபதிதான் ஸ்கிரீன்பிளே மற்றும் டயலாக் எழுதுகிறார். என்னுடைய சகோதரர் இயக்குகிறார். இந்தப் படம் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.