லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல்கள், டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், படத்தில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வரும் விஜய், குடிபழக்கத்திற்கு அடிமையானவர். இதற்கு தண்டனையாக சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு விஜய் மாற்றப்படுகிறார்.
சீர்த்திருப்பள்ளியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி சிறார்களை சட்டவிரோத தொழிலுக்காக பயன்படுத்துகிறார். இதனால் விஜய் - விஜய் சேதுபதிக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள்தான் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது. படத்தின் நேரம் 180 நிமிடங்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இதுதான் படத்தின் உண்மையான கதையா அல்லது நெட்டிசன்களால் பொய்யாக உருவாக்கப்பட்ட கதையா என்பது படத்தின் வெளியீட்டுக்கு பின்னர்தான் தெரியவரும்.
இதையும் படிங்க: ‘சூபியும் சுஜாதையும்’ இயக்குநர் ஷாநவாஸ் உயிரிழப்பு!