ETV Bharat / sitara

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய்? - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய்

author img

By

Published : Jul 28, 2021, 6:00 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் வம்சி பைடிபள்ளி. இவரது இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ’மகரிஷி’ திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.

முன்னதாக இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தனது 66ஆவது படமாக வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இப்படம் தயாராக உள்ளதாகவும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதையும் படிங்க: 'அபராதத் தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை' விஜய் தரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.