ETV Bharat / sitara

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... யூடியூப் சேனல் தொடங்கும் விஜய் - End to rumors

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்தும், விஜய் மக்கள் இயக்கம் குறித்தும் அதிகளவிலான வதந்திகள் பரவி வருவதையடுத்து அவர் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது.

actor vijay starts youtube channel
actor vijay starts youtube channel
author img

By

Published : Nov 29, 2020, 3:48 PM IST

2021 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேலையில், கடந்த சில நாள்களாக முக்கிய தலைவர்களுக்கு நிகராக பேசப்பட்டவர்கள் நடிகர் விஜயும், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும்தான்.

தேவை ஏற்பட்டால், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக உருமாறும் என அறிவிப்பு விடுத்த சில தினங்களுக்குள்ளாகவே எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்தார். இவரது செயலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தன்னுடைய பெயரை எந்த விவகாரத்திலும் யாரும் பயன்படுத்த வேண்டாம் என நடிகர் விஜய் தனது தந்தையின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்.

தந்தை ஆரம்பித்துள்ள கட்சிப் பணிகளில் ஈடுபடும் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, விஜயின் தாயார் சோபா உள்ளிட்ட பலர் கட்சிப் பொறுப்புகளை ராஜிநாமா செய்து, சந்திரசேகரின் திட்டத்திலிருந்து பின்வாங்கினர்.

பின்னர் எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடை கட்சித் தொடங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பினும், விஜய் குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும் தொடர்ந்து வதந்திகள் பரவி வந்த வண்ணமே இருந்தன.

இதற்கு முடிவு தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கவுள்ளார். இதனை விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

இந்த யூடியூப் சேனலை தேவையற்று பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும், அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவும், விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்களை பதிவேற்றவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதை நிறுத்திய எஸ்.ஏ.சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.