ETV Bharat / sitara

'ஐயோ அதை நான் கூறவே இல்லை' - பதறிய விஜய் சேதுபதி! - 2019தேர்தல்

கோவை: ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தான் கூறவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 26, 2019, 8:53 PM IST

வித்தியாசமான நடிப்பாலும், கதைத் தேர்வாலும், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தவர் விஜய் சேதுபதி. தற்போது இவரது நடிப்பில் 'சிந்துபாத்' திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், கோவை காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள ஜோயாலுக்காஸ் நகை கடை திறப்பு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு, கடையினை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "நேற்று மதுரையில் நான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறவில்லை. யாரும் அதை திரித்துக் கூற வேண்டாம். தேர்தல் முடிவுகளை எல்லோரையும் போல் நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்றார்.

விஜய் சேதுபதி செய்தியாளர் சந்திப்பு

சு.சீனிவாசன்.         கோவை

தேர்தல் முடிவுகளை எல்லோரையும் போல எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் வேண்டுமென தான் பேசவகல்லை எனவும் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்

கோவை காந்திபுரம் நூறடி சாலையில் ஜோயாலுக்காஸ் நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி நகைக்கடையினை திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி,  மே 16 ம் தேதி தனது சிந்துபாத் திரைப்படம் வெளியாகிறது என தெரிவித்தார்.  பிடித்த படங்களில் நடித்து வருகிறேன் எனவும்,  எல்லா விதமான படத்திலும் நடிப்பேன் எனவும் அவர் கூறினார்.  மதுரையில் நேற்று ஆட்சி மாற்றம் வேண்டுமென நான் பேசவில்லை எனவும், தான் பேசாததை பேசியதாக திரித்து பேசாதீர்கள் எனக்கூறிய அவர், தேர்தல் முடிவுகளை எல்லோரையும் போல எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தான் பேசினேன் என தெரிவித்தார்

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.