சென்னை: தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி அக். 6, 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டன. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இதனிடையே பாமக, தேமுதிக, மநீம கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நடிகர் விஜய்யிடம் அனுமதிகோரியதாகவும், அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் சமீபகாலமாக இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் குறித்து பேசிவருவதும், அவரது ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்து போஸ்டர்கள் ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வரி கட்டிய விஜய் - அரசு விளக்கம்