மாநகரம், கைதி வெற்றிப்படத்தையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து 'மாஸ்டர்' என்னும் படத்தை இயக்கினார். கரோனா காலகட்டத்தில் வெளியான அப்படம் வசூல்ரீதியில் வெற்றிப் படமாக அமைந்தது.
மீண்டும் 'மாஸ்டர்' கூட்டணி
மேலும், இத்திரைப்படம் கரோனா காலகட்டத்தில் துவண்டு கிடந்த தமிழ் சினிமாத்துறையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்தது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகிறது.
இந்நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இதனைத்தொடர்ந்து, அடுத்த படமான தளபதி 67-இல் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் நடிகர் விஜய் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:சிகிச்சை முடிந்து தமிழ்நாடு திரும்பிய விஷால்!