ETV Bharat / sitara

நடிகர் உதயாவின் "செக்யூரிட்டி" குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்! - security shortflim news

ஃபோர்ட்பிளேயர் சர்வதேச திரைப்பட விழாவில், 20 நாடுகள் கலந்து கொண்ட போட்டியில் சிறந்த இந்தியன் ஷார்ட் ஃபிலிமாக உதயாவின் "செக்யூரிட்டி" குறும்படம் தேர்வாகியுள்ளது.

dhaya
udhaya
author img

By

Published : Sep 21, 2020, 12:11 PM IST

நடிகர் உதயா எழுதி முதல்முறையாக இயக்கிய "செக்யூரிட்டி" குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் இக்குறும்படம் வெளிவர இருக்கிறது.

நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தைப் பார்த்து மறைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோரும் இப்படத்தை பார்த்து உதயாவைப் பாராட்டியுள்ளனர்.

jjs
சிறந்த இந்தியன் ஷார்ட் ஃபிலிம்

மேலும், இந்த குறும்படம் Cosmo film festival, South film and arts academy, South america மற்றும் பல்வேறு திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஃபோர்ட்பிளேயர் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் கலந்துகொண்ட போட்டியில் சிறந்த இந்தியன் ஷார்ட் ஃபிலிம் ஆக உதயாவின் "செக்யூரிட்டி" தேர்வாகி சாதனைப் படைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.