சென்னை: ஏழு தமிழர்களின் விடுதலைக்காக போராடி வரும் பேரறிவாளனின் தாயாருக்கு ஆதரவளித்துள்ளார் நடிகரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில்,
ஏழு தமிழர்களின் விடுதலைக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். ஒட்டுமொத்த தமிழினத்தின் இக்கோரிக்கையை நம் கழகத் தலைவர் அவர்களும் வலியுறுத்தி வருகிறார். ஒரு பாசப் போராட்டத்தை அரசியலாக்காமல் அற்புதம்மாளின் போராட்டத்துக்கு அரசுகள் செவிசாய்க்க வேண்டும்
பேரறிவாளன் அவர்களின் வாக்குமூலத்தைத் தவறாக எழுதியதாக விசாரணை அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார். உண்மை இப்படியிருக்கையில், முப்பது ஆண்டுகள் சிறையென்பது மனித உரிமை மீறல்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
ஏழு தமிழர்களின் விடுதலைக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். ஒட்டுமொத்த தமிழினத்தின் இக்கோரிக்கையை நம் கழகத் தலைவர் அவர்களும் வலியுறுத்தி வருகிறார். ஒரு பாசப் போராட்டத்தை அரசியலாக்காமல் அற்புதம்மாளின் போராட்டத்துக்கு அரசுகள் செவிசாய்க்க வேண்டும்
— Udhay (@Udhaystalin) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஏழு தமிழர்களின் விடுதலைக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். ஒட்டுமொத்த தமிழினத்தின் இக்கோரிக்கையை நம் கழகத் தலைவர் அவர்களும் வலியுறுத்தி வருகிறார். ஒரு பாசப் போராட்டத்தை அரசியலாக்காமல் அற்புதம்மாளின் போராட்டத்துக்கு அரசுகள் செவிசாய்க்க வேண்டும்
— Udhay (@Udhaystalin) June 12, 2020ஏழு தமிழர்களின் விடுதலைக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். ஒட்டுமொத்த தமிழினத்தின் இக்கோரிக்கையை நம் கழகத் தலைவர் அவர்களும் வலியுறுத்தி வருகிறார். ஒரு பாசப் போராட்டத்தை அரசியலாக்காமல் அற்புதம்மாளின் போராட்டத்துக்கு அரசுகள் செவிசாய்க்க வேண்டும்
— Udhay (@Udhaystalin) June 12, 2020
முன்னதாக, இயக்குநர்கள் கார்த்திக் சுப்பராஜ், பா. ரஞ்சித், கரு. பழனியப்பன், 'மூடர்கூடம்' நவீன் என பல கோலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை அற்புதம்மாளுக்கு வெளிப்படுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்குமாறு போராடி வரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். #StandwithArputhamAmmal என்ற ஹேஷ்டாக்கில் அற்புதம்மாளுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் இதுதொடர்பாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
-
பேரறிவாளன் அவர்களின் வாக்குமூலத்தைத் தவறாக எழுதியதாக விசாரணை அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார். உண்மை இப்படியிருக்கையில், 30 ஆண்டுகள் சிறையென்பது மனித உரிமை மீறல். #StandwithArputhamAmmal
— Udhay (@Udhaystalin) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">பேரறிவாளன் அவர்களின் வாக்குமூலத்தைத் தவறாக எழுதியதாக விசாரணை அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார். உண்மை இப்படியிருக்கையில், 30 ஆண்டுகள் சிறையென்பது மனித உரிமை மீறல். #StandwithArputhamAmmal
— Udhay (@Udhaystalin) June 12, 2020பேரறிவாளன் அவர்களின் வாக்குமூலத்தைத் தவறாக எழுதியதாக விசாரணை அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார். உண்மை இப்படியிருக்கையில், 30 ஆண்டுகள் சிறையென்பது மனித உரிமை மீறல். #StandwithArputhamAmmal
— Udhay (@Udhaystalin) June 12, 2020
பேரறிவாளன் கைது செய்யப்பட்டு ஜூன் 11ஆம் தேதியுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவரை விடுதலை செய்யுமாறு #StandwithArputhamAmmal #ReleasePerarivalan உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.
இதையும் படிங்க: குழந்தைகளின் உயிரோடு விளையாடினால், அதற்கு பழனிசாமியே பொறுப்பு - உதயநிதி