நடிகர் சூர்யாவின் 40ஆவது திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். 'எதற்கும் துணிந்தவன்' (Etharkum Thunindhavan) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி, இளவரசு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமான இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நிறைவடைந்தது.
-
#EtharkkumThunindhavan is releasing on Feb 4th, 2022!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop #SaranyaPonvannan #MSBhaskar @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO #ETOnFeb4th pic.twitter.com/hwuwEkX3Bm
— Sun Pictures (@sunpictures) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#EtharkkumThunindhavan is releasing on Feb 4th, 2022!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop #SaranyaPonvannan #MSBhaskar @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO #ETOnFeb4th pic.twitter.com/hwuwEkX3Bm
— Sun Pictures (@sunpictures) November 19, 2021#EtharkkumThunindhavan is releasing on Feb 4th, 2022!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop #SaranyaPonvannan #MSBhaskar @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO #ETOnFeb4th pic.twitter.com/hwuwEkX3Bm
— Sun Pictures (@sunpictures) November 19, 2021
இந்நிலையில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
முன்னதாக 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் பணியாற்றிய படக்குழுவினருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தங்க நாணயங்களை சூர்யா பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Vijay Sethupathi: மரைக்காயர் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த விஜய் சேதுபதி