ETV Bharat / sitara

மீண்டு வா தம்பி எஸ்.பி.பி. - நடிகர் சிவகுமார் உருக்கம்! - Actor Sivakumar to SPB

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தம்பி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வீட்டுக்கு வா என நடிகர் சிவகுமார் உருக்கமாகப் பேசி காணொலி வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகுமார் உருக்கமாக பேசி வீடியோ
நடிகர் சிவகுமார் உருக்கமாக பேசி வீடியோ
author img

By

Published : Aug 18, 2020, 3:35 PM IST

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கடந்த 5ஆம் தேதி கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதனிடையே எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் எஸ்.பி. சரண் நேற்று (ஆக.17) தெரிவித்தார்.

இதனையடுத்து எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து திரும்ப வர வேண்டும் என்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் தொடர்ந்து பிரார்த்திப்பதாகத் தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், "மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தம்பி எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து, வீட்டுக்கு வா" என நடிகர் சிவகுமார் உருக்கமாகப் பேசி காணொலி வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகுமார் உருக்கமாகப் பேசி காணொலி வெளியீடு

அதில், “பாலு என்னவிட நீ வயதில் சிறியவன். அதனால் தம்பி என்றே அழைக்கிறேன். உலகமே கொண்டாடுகின்ற ஒப்பற்றப் பாடகன்; நீ நிறைகுடம்; நீங்கள் நூற்றுக்கணக்கான படங்களில் எனக்காக டூயட் பாடி இருக்கிறீர்கள். எத்தனையோ சவால்களைத் தாண்டி வந்துருக்கீங்க பாலு, இந்தக் கரோனாவை கடந்து வாங்க” என தான் நடித்த படங்களில் எஸ்.பி.பி. பாடிய பாடல்களை நினைவுகூர்ந்து நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள காணொலியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...'வந்துருடா பாலு' - கண்ணீர்விட்டு அழுத பாரதிராஜா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.