நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் பலராலும் ரசிக்கப்படும் நடிகர் ஆவார். தற்போது 'அயலான்', 'டாக்டர்' என்னும் இரு படங்களை தன் வசம் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அசோக் என்பவருடன் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தத் திரைப்படத்தின் வேலைகள் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இரட்டை வேடம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க... கரோனாவிலும் 'அனு'வை கைவிடாத சிவகார்த்திகேயன்
முன்னதாக 'ரெமோ', 'சீமராஜா' ஆகிய திரைப்படங்களில் இரண்டு வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இருப்பினும் படம் முழுக்க அந்த பாத்திரங்கள் இடம்பெறாது. 'ரஜினிமுருகன்' திரைப்படத்தில் மட்டும் ஒரே ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் இரண்டு வேடங்களில் வருவார்.
ஆனால் தற்போது நடிக்கப்போகும் திரைப்படத்தில் படம் முழுவதும் சிவகார்த்திகேயன் இரண்டு தோற்றங்களில் தோன்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சிவகார்த்திகேயனை நடிப்புலகில் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.