தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் சிம்பு. இவர் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இன்று முதல் ட்விட்டர், பேஸ்புக், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார். அனைத்து தளத்திலும் ‘Silambarasan TR' என்ற பெயரில் கணக்கு திறந்துள்ளார்.
இன்று காலை 9.09 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை சிம்பு தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இச்செய்தி சிம்பு ரசிகர்களிடையே மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுக்கும் எஸ்டிஆர்!