ETV Bharat / sitara

’இது ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு’ - நட்சத்திர சகோதரர்களுக்கு சிம்பு ஆறுதல் - வெங்கட் பிரபு தாயர் மறைவுக்கு சிம்பு இரங்கல்

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம் ஜி ஆகியோரின் தாயார் மணிமேகலை மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Silambarasan
Silambarasan
author img

By

Published : May 10, 2021, 8:13 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் கங்கை அமரன். இவரது மனைவி மணிமேகலை. இந்தத் தம்பதியினரின் மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி இருவரும் தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையோடு வலம் வருகின்றனர்.

முன்னதாக, மணிமேகலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு-பிரேம்ஜியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு, நண்பர் பிரேம்ஜி, யுவன் உள்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை. எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள்.

கடந்த இரண்டு வருடங்களிலும் இணைந்து பணிபுரியும்போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்தச் சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் அம்மாமீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதை அறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு. அப்பாவிற்கும் குடும்பத்திற்கும் உங்கள் அனைவருடனும் இழப்பையும் வேதனையும் பகிர்ந்து கொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் சிம்பு நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், டப்பிங், இசைக்கோர்ப்பு உள்ளிட்ட இறுதிகட்டப்பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.